95 ஆவது வயதில் பத்ம பூஷன் விருது பெற்ற மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
தனது 95 ஆவது வயதில் “பத்ம பூஷண்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருக்கிறார் மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்!
1926 ஆம் ஆண்டு… திண்டுக்கல் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் ஒரு தேவேந்திர குல வேளாளர் குடும்பத்தில் கிருஷ்ணம்மாள் தோன்றினார்!
இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் படிப்பில் மிகவும் கெட்டி. எனவே கல்லூரி வரை சென்று படித்துப் பட்டம் பெற்று, இவரது சமுதாயத்திலே முதல் பட்டதாரி ஆனார்!
இச்சூழலில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுச் சாதி இளைஞர் ஜெகன்னாதனைக் காதலித்தார்!
இருவருமே விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றனர்!நாடு விடுதலை அடைந்த பிறகு, 1950 ஆம் ஆண்டுதான், சுதந்திர இந்தியாவில்இவர்கள் திருமணம் நடந்தது!
நிலமற்ற விவசாய மக்களுக்கு பெரும் நிலம் படைத்தோரிடமிருந்து நிலம் பெற்றுத் தரும் ஆச்சாரிய வினோபாவின் “பூமிதான இயக்கத்தில்” இணைந்து பல போராட்டங்களை இவர்கள் நடத்தினர்!
இது வரை சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்களை இவர்கள் மீட்டு, ஏழைகளுக்குக் தந்துள்ளனர்!
ஊடக வெளிச்சமின்றி இச்சாதனை நடந்துள்ளது! 2013 இல் அன்புக் கணவர் ஜெகன்னாதனை இழந்த கிருஷ்ணம்மாள், தொடர்ந்து தனது மக்கள் சேவைகளைத் தொடர்கிறார்!
இவருக்கு 2014 இல் “பத்ம ஸ்ரீ” , தற்போது, “பத்ம பூஷண்” ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன!
“இந்த விருதுகள், எங்கள் தாயால் பெருமை அடைகின்றன” என்று மக்கள் இவரைப் போற்றுகிறார்கள்!
உலகின் மிகப் பெரும் “நோபிள் விருது” க்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருப்பது, இவருக்குச் சிறப்பு!
** தற்போது சென்னை நகரில் பெய்து வரும் கன மழையால், நகரின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்!
” கடந்த அ. தி. மு. க. ஆட்சியில் ,உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி, நகர்ப்புற மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ 5000 கோடி பணத்தை முறையாகச் செலவிட வில்லை… அனைத்து நீர் வழிகளும் சரியான திட்டமின்றி அமைக்கப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு நிற்கின்றன!
அனைத்து ஒப்பந்தங்களும் அமைச்சரின் நெருங்கிய உறவினர்களுக்கே தரப்பட்டன!
இந்தக் காரணங்களாலேயே இன்று சென்னை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று அறப்போர் இயக்கம் ஆதாரங்களோடு குற்றம் சாட்டி இருக்கிறது!
– ஓவியர் இரா. பாரி.