500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுடன் திமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி ரஜினி மன்ற தலைவர்: கலகலக்கும் ரஜினி மக்கள் மன்றம்

Must read

சென்னை:

ஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று கூறி திமுகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினி, தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றியதோடு, அரசியலை கண்டுகொள்ளாமல், படங்களில் நடித்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினி அண்ணன் சத்தியநாராயணாவின் சிபாரிசில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மதியழகனை  மக்கள் மன்றத்தில் இருந்து நீக்குவதாக ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து, அவருக்கு பதிலாக சீனிவாசன் என்பதை நியமனம் செய்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன், ரஜினி மக்கள் மன்றத்தில் சரியான மரியாதையில்லை எனக் கூறி 500க்கும் மேற்பட்டரஜினி ரசிகர்கள் புடை சூழ ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

இன்று சென்னை வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சுமார் 500 பேர் மதியழகன் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதியழகன்,  ரஜினி மக்கள்மன்றத்தில் தங்களுக்குஉரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும்  தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் மக்களுக்கு மகத்தான வழியில் செயலாற்றி வரும் தலை வர்களில் முதன்மையாக திகழுபவர்  திமுக தலைவர் ஒருவரே  என்றும், இதனால் திமுக கட்சியில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ரஜினி ரசிகர்கள் 500 பேர்திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article