விமானி இறந்த தகவல் தெரியாத கர்ப்பிணி மனைவி..

Must read

விமானி இறந்த தகவல் தெரியாத கர்ப்பிணி மனைவி..

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான ஒவ்வொரு உயிரிலும் தனித்தனி சோகக்கதைகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானத்தைச் செலுத்தி வந்த துணை விமானி அகிலேஷ் சர்மா (கோ பைலட்) உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர்.

மகாராஷ்டிராவில் விமானப்படிப்பு படித்த அகிலேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு மேகா என்ற பெண்ணை மணந்தார்.

மேகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இன்னும் 15 நாளில் குழந்தைக்குத் தாயாகப்போகும் மேகாவுக்கு இதுவரை கணவன் இறந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

எனினும் கணவன் ஓட்டிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது அவருக்குத் தெரியும்.

‘’அகிலேஷ் சர்மா உயிர் இழந்த சம்பவம் தெரிந்தால் மேகா துடித்துப்போவாள் என்பதால், இந்த தகவலை அவளிடம் சொல்லாமல் மறைத்துள்ளோம்’’ என்கிறார்கள் , குடும்பத்தார்.

அகிலேஷ் உடலை அவரது உறவினர்கள் கோழிக்கோட்டில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்துள்ளனர்.

இங்கிருந்து மதுராவுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறும்.

-பா.பாரதி.

More articles

Latest article