ராஞ்சி

ரூ. 1500 கோடி செலவில் கட்டப்பட்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவை கட்டிடக்கூரை சரிந்து விழுந்தது.

ஜார்க்கண்ட்மாநில சட்டப்பேரவை கட்டிடம் ரூ. 1500 கோடி செலவில் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் வருடம் திறந்து வைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கட்டிடத்தில் உள்ள நூலகப் பகுதி கூரை சரிந்து விழுந்துள்ளது.

இந்த பகுதியில் பணி புரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் கட்டிடம் சீல் இடப்பட்டுள்ளது.

எனவே கூரை சரிந்து விழுந்த போது அங்கு யாரும் இல்லாததால் ஒருவருக்கும் காயம் உண்டாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

மேலும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு தொடர்புடைய அதிகாரிஅக்ள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் அரசு பணி அளித்துள்ள ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் கட்டிடம் கட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.