சென்னை:
கோயம்பேட்டில் காய்கறி வாங்கி  தள்ளுவண்டிமூலம் விற்பனை செய்து வந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த 12  பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் விஷயத்தில் தமிழகஅரசு தான்தோன்றித்தனமாக கோட்டைவிட்டதன் பாதிப்பு சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி தள்ளுவண்டியில் விற்பனை செய்த வேளச்சேரியை சேர்ந்த வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர்  12  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் குடியிருக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.  அவர் காய் விற்பனை செய்த பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், முன்னாள் இராணுவ குடியிருப்பு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதுதவிர அடையாறு மண்டலத்தில் மொத்தம் 45 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.