கோயம்புத்தூர்: கோவை நகரில் செயல்பட்டுவரும் 9 சிறப்பு நீதிமன்றங்கள் மே மாதம் 4ம் தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால், தற்போது கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கால், வாய்தா வழக்குகள் அனைத்தும் வேறு தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டன.
கோவை சிபிஐ நீதிமன்றம், இசி நீதிமன்றம், டான்பிட் நீதிமன்றம், குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், லேபர் நீதிமன்றம், கூடுதல் லேபர் நீதிமன்றம், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம், ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில், ஜூன் மாதத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தள்ளிவைக்கப்பட்ட தேதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு முடிந்து, மே 4ம் தேதி தொடங்கி மேற்கண்ட நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட நீதிபதி சக்திவேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.