சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. உயர்நீதிமன்றம், வாகன பேரணி அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்து காவல்துறை அறிவித்துள்ளது.

கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு காவல்துறை சிறு மாற்றங்களுடன் அனுமதி அளித்துள்ளது. அதனப்டி, பேரணி தூரத்தை 4 கிலோ மீட்டரில் இருந்து 2.5 கி.மீ ஆக குறைத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளத.

அதன்படி, கோவை “மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமனையில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை, கண்ணப்பன் நகர் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை அனுமதி கோரிய நிலையில்,  மருத்துவமனைக்கு இடையூறு இல்லாத வகையில் பேரணியின் தூரம் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்த  காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரிதத  உயர்நீதிமன்றம் நிபந்ததனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டது,.

5வதுமுறையாக  தமிழ்நாடு வருகை தந்துள்ள பிரதமர் மோடி  நேற்று  ( 15ந்தேதி)  காலை 11 மணியளவில் கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து  இன்று மீண்டும் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த ஏற்கனவே அனுமதி கோரிய நிலையில்,நேற்று திடீரென கோவை காவல்துறை அனுமதி மறுத்தரது. கோவையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்து இருந்தார்.

இதனிடையே பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.