கோவை

கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது என்பவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். 

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்பவர், சுயேட்சையாக போட்டியிடுகிறார். நூர்முகமது இதுவரை 43 முறை சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூர்முகமதுவுக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.  ஆயினும் தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என, கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்  ஸ்டார் தொகுதி அந்தஸ்தில் உள்ள கோவை சுயேச்சை வேட்பாளரின் இந்தப் புகார் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.