ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு

Must read

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தாயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படமாக தேர்வாகி இருக்கிறது.

சர்வதேச திரைப்பட பிரிவில் மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிட பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக சோமாலியா நாட்டைச் சேர்ந்த ‘தி க்ரேவ் டிஃக்கர்ஸ் வைப்’ (The Gravedigger’s Wife) என்ற திரைப்படம் இடம்பெறுகிறது.

நடுவர்களின் முடிவின் அடிப்படையில் இறுதிசுற்றுக்கு தகுதியான படங்களின் பட்டியல் 2022 ம் ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி வெளியாகும்.

94வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 27 அன்று நடைபெற இருக்கிறது.

More articles

Latest article