சென்னை:
கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.