சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ ட்ரெய்லர் வெளியீடு….!

Must read

ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்கள் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது கொம்பு வச்ச சிங்கம்டா. இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடிகை மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சூரி, மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெறடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள கொம்புவச்ச சிங்கமடா படத்திற்க்கு வி.டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

More articles

Latest article