உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரை அள்ளிய கேகேஆர் அணி

Must read

கொல்கத்தா:

டப்பு உலககோப்பை சாம்பியனான இங்கிலாந்துஅணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலைபேசி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் உலகக்கோப்பையைத் தட்டிச்சென்ற இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் டிரெவர் பேலிஸ்.

இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி நிர்வாகம் வளைத்து உள்ளது. கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல, கேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் விலகிய நிலையில், கேகேஆர் அணிக்கு, புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ்ஸும் பேட்டிங் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரெவர் பேலிஸ் கேகேஆர் அணியின்  கேப்டனராக  கவுதம் கம்பீர் இருந்தபோது, கடந்த  2012ம் ஆண்டு முதல் 2014 வரை தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அதுபோல மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

டிரெவர் பேலிஸ், ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article