கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Must read

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, கடந்த ஆட்சியின்போது மணல் ஒப்பந்ததாரராக இருந்தவர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வரும் தனிப்படை காவல் துறையினர், தற்போது  மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுக சாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றவர் ஆறுமுக சாமி; அதிமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தவராகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகனா, செந்தில் பேப்பர்& போர்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள செர்லி நிவாஷ் குடியிருப்பில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில்குமாரின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். அதன்பேரில் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article