கோவை:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமின் பெற்ற கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர்களது ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களை கைது செய்ய ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில், சயன், மனோஜ் ஆகியோரை திருச்சூரில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களில், அவரது கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. அப்போது காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து மேலும் பலர் மர்மமான முறையில் இறந்தவர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், மனோஜ், சயான் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டி கைது செய்தனர். இந்த வழக்கில் மனோஜ், சயானுக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இநத் நிலையில் சமீபதில், முன்னாள் தெஹல்கா ஆசிரியர் மூலம் தொலைக்காட்சிகளில் சயான், மனோஜ் ஆகியோா் பேட்டி அளித்தனா். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக முதல்வா் பழனிசாமிக்கும் தொடா்பு இருப்பதாக தொிவித்திருந்தனா்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்டி அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து. இந்த நிலையில்,  உதகை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சயான், மனோஜ்க்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். அவா்கள் வெளியில் இருந்தால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அவா்கள் ஆஜராகாத நிலையில் இருவரின் ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம், அவா்களுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த  நிலையில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் பகுதியில்  தங்கியிருந்த சயான், மனோஜை தமிழக காவல் துறையினா் இன்று கைது செய்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிபதி முன் ஆஜா் படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.