உதகை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேடில், கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை நடைபெற்றது. அதை தடுக்க முயன்ற காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையிலும், மற்ற 8 பேர் ஜாமீனிலும் உள்ளனர். இவ்வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்றைய விசாரணையின்போது, சிறையில் உள்ள சயான், வளையார் மனோஜ் மற்றும் ஜாமீனில் உள்ள 3 பேர் ஆஜரானார்கள். லாட்ஜ் உரிமையாளர் சாந்தா உட்பட 3 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின் வழக்கை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி அருணாசலம் ஒத்திவைத்தார்.