ர்க்கரை நோய்  டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் ஸ்வீடனில் உள்ள Lund University Diabetes Centre மற்றும் பின்லாந்திலுள்ள The Institute for Molecular Medicine-ன் விஞ்ஞானிகள் ஆய்வில், வயது வந்தவர்களுக்கு மூன்று தனித்துவமான சர்க்கரை நோய் ஏற்படுவதாக முன்பு கண்டுபிடித்ததாக கூறப்பட்டிருந்தது.

அந்த சோதனைக்குப் பிறகு இப்போதைய ஆராய்ச்சி ஒன்றில் நீரிழிவில் ஐந்து வகைகள் என்று கண்டுபிடித்துள்ளனர். Lancet Diabetes and Endocrinology இதழிலும் இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் வந்துள்ளது. இதுபோன்ற புதிய ஆய்வுகளினாலும், கண்டுபிடிப்புகளினாலும் நோயாளிகளுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

‘‘புதுப்புது சோதனைகளும் தேவைகளும், கண்டுபிடிப்புகளின் அவசியமும் நமக்கு தேவைப்படுகிறது. அப்போதுதான் நோயாளி எந்த வகையான சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளார் என்பதைத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும்.

சுய நோய் எதிர்ப்பாற்றலோடு தொடர்புடைய சர்க்கரை நோய்

  • கடுமையான இன்சுலின் எதிர்ப்புடன் சம்மந்தப் பாட்ட சர்க்கரை நோய்
  • இளமையில் வரும் இன்சுலின் குறைபாடுகள்,
  • மோசமான வளர்சிதை மாற்ற கட்டுப்பாடுடைய,
  • சுய நோய் எதிர்ப்பாற்றல் இல்லாத சர்க்கரை நோய்
  • கடுமையான இன்சுலின் குறைபாடுடைய சர்க்கரை நோய்

மற்றும் வயதானவர்களுக்கு வருகிற சர்க்கரை நோய் என்று மொத்தம் ஐந்து  வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியாவில் மொத்தம் 7.2 கோடி சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். இதில் மாநில வாரியாக நாம் பிரித்தோம் என்றால் தமிழ்நாடு 35 லட்சம் முதல் 40 லட்சம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். உடல் எடையுடன் கூடிய சர்க்கரை நோய் மற்றும் Type II வகை சர்க்கரை நோய் ஆகியவை இந்தியாவில் பரவலாக காணப்படும் சர்க்கரை நோய் ஆகும்.

உடல் பருமன் மற்றும் வயது சம்பந்தமான சர்க்கரை நோய்கள் இப்போது பரவலாக அதிகரித்து கொண்டிருக்கிறது.  உடல் பருமன் சர்க்கரை நோயாளிகளுக்கு Metformin போன்ற சில வகையான மருந்துகள் அவசியமாகும். அந்த மருந்துகள் வேலை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இன்னும் கூடுதலாக Metformin கொடுக்க வேண்டும். அவர்களுக்கு இன்சுலின் கொடுப்பது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.

இன்னொரு பக்கம் இன்சுலின் குறைபாடுள்ள நோயாளிகள் இன்சுலின் அளவை அதிகமாக்கும் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது. அந்த மருந்துகள் சரியாக பலன் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு இருக்கும் இன்சுலின் குறைபாட்டை அறிந்து அவர்களுக்கு போதுமான மருந்துகளை கொடுக்க வேண்டும். இந்த நிலைமையில் தற்போது சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ள வகைப்பாடுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்னும் துல்லியமான முறையில் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.