டாக்கா: இரட்டை சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்வதற்கு காரணமாக அமைந்தார்.

395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது விண்டீஸ் அணி. நிக்குரமா பானர் 86 ரன்கள் அடித்தார். அவர், கைல் மேயர்ஸ் உடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப்தான் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமானது.

ஜோஷ்வா டா சில்வா, 20 ரன்கள் அடித்து கடைசி நேரத்தில் கைக்கொடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மெனும் சோபிக்கவில்லை என்றாலும், ஒருபக்கம் களத்தில் நிலைத்து நின்ற கைல், 310 பந்துகளை சந்தித்து 7 சிக்ஸர்கள் & 20 பவுண்டரிகளுடன் 210 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, விண்டீஸ் அணியை வெற்றிபெறச் செய்தார்.

இறுதியில், 127.3 ஓவர்கள் ஆடிய விண்டீஸ் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து, 395 ரன்களை எடுத்து, முதல் டெஸ்ட்டில் வென்று, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது விண்டீஸ் அணி.