ஐபிஎல்2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

Must read

அபுதாபி: 
ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரூ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்த, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்களை எடுத்தது. இந்த அணியில் தேவதூத் படிக்கல் அதிகபட்சமாக 22 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
93 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் சுப்மான் கில் ஒரு சிக்ஸ், ஆறு பவுண்டரிகளுடன் 48 ரங்களையும், வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்ஸ், ஏழு பவுண்டரிகளுடன் 41 ரன்களையும் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர் பந்து வீச்சாளர்களில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருந்தாஹ் கொல்கத்தா நைட் ரைடர் அணி ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  புள்ளி பட்டியலில் 3ம் இடத்திலிருந்த ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரூ அணி அதே இடத்தில் தொடர்கிறது.
ஐபிஎல் தொடரில் நாளை துபாயில் நடக்க போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் –  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30  மணிக்கு தொடங்க உள்ளது.

More articles

Latest article