ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த புனே-கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. சுனில் நரின் சேர்ப்பு
9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று இரவு 45-வது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.  ‘டாஸ்’ ஜெயித்த புனே அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
ரஹானே 2 ரன்னில் போல்டு ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா அணியின் சிறப்பான பந்து வீச்சில உஸ்மான் கவாஜா (21), சவுரப் திவாரி (13), ஜார்ஜ் பெய்லி (33) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். புனே அணி 17.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
unnamed
 
பின்னர் கொல்கத்தா அணிக்கு 9 ஓவருக்கு 66 ரன்கள் வெற்றி இலக்காக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நிர்ணயிக்கப்பட்டது. அதிரடி ஆட்டம் விளையாடிய கொல்கத்தா 2 விக்கெட்டை மட்டும் இழந்து 5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பதான் 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கோல்கட்டா வெற்றிக்கு காரணமாக இருந்தார்.