சிக்கிமில் இந்தியாவின் முதல் ஆன்லைன் பந்தய மையத்தை திறந்து வைத்தார் கபில் தேவ்
வியாழன் மாலை சிக்கிம் தலைநகர் கேங்க்டாக்கில் (Gangtok) உள்ள எம்ஜி ரோட்டில் நாட்டின் முதல் ஆன்லைன் விளையாட்டு பந்தய  மையத்தை கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் திறந்து வைத்தார்.
எனினும், தற்போது நடந்து வரும் ஒரு கால்பந்து விளையாட்டின் மீது முதல் பந்தயம் வைக்குமாறு கபில் தேவ் அவர்களை அமைப்பாளர்கள்- கோல்டன் கேமிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த போதிலும் அவர் அதை மறுத்தார், ஏனெனில் அவர்  பொதுவாகவே “சூதாட்டத்தில்  நாட்டம் உள்ள நபர் அல்ல”.
sikkim 1
கவராடல், பணையத் தொகை கட்டுதல், பந்தயம் கட்டுதல் என்று கவராடல், பணையத் தொகை கட்டுதல், பந்தயம் கட்டுதல் என்று பலவேறு பெயர்களில்  அழைக்கப்படும் சூதாட்டத்தை ஆன்லைனில் நடத்தும் ஒரே மாநிலம் சிக்கிம் ஆகும். மற்ற இடங்களில் தடை நீதித்து வருகின்றது. அழைக்கப்படும் சூதாட்டத்தை ஆன்லைனில் நடத்தும் ஒரே மாநிலம் சிக்கிம் ஆகும். மற்ற இடங்களில் தடை நீடித்து வருகின்றது.
நாட்டில் ஆன்லைன் விளையாட்டு பந்தயத்தை சட்டப்பூர்வமாக கொண்ட ஒரே மாநிலமான சிக்கிம், அந்த நோக்கத்தை நிறுவுவதற்காக மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
கோல்டன் கேமிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் இயக்குனரான மனோஜ் சேத்தி, “சிக்கிம் துணிகரம் தான் நாட்டின் இத்தகைய முதல் முயற்சி, இதேபோல் மற்ற மாநிலங்களும் கூட எங்களது தனிப்பட்ட முன்மாதிரியை பின்பற்றி, ஆன்லைன் விளையாட்டு பந்தயத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று நம்புகிறேன்.”
மேற்கு வங்கத்திலிருந்து சிக்கிம் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் தான் நிறுவனத்தின் முதன்மையான  சந்தை இலக்கு.
ஒரு அகஇணையதள இணைப்பு மூலம் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் பந்தய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசு  கோல்டன் கேமிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் மற்ற இரண்டு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2015ல் சிக்கிம் அரசு இந்தியா முழுவதும் உள்ள மக்களை இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வைக்க முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே சிக்கிமிற்கு சுற்றுலா சென்றால் மட்டுமே நீங்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபடமுடியும்.
 
sikkim kapil 1சிக்கிம் ஆன்லைன் கேமிங் (ஒழுங்குமுறை) சட்டம் 2008 சட்டத்தின் கீழ் மாநில அரசு இயற்றிய சட்டங்களின் படி ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தய செயல்கள் தொடங்கப்பட்டன. ஏப்ரல் 2014 இல், நாட்டின் மற்ற மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பாதிக்கப்படாத வரையில் ஆன்லைன் பந்தய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சிக்கிம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
 
 
kapilநாட்டில் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் தான் பெரும்பாலான தாராளவாத ஆன்லைன் கேமிங் சட்டங்கள் உள்ளன. மாநில அரசு, ஆன்லைன் மற்றும் காகித லாட்டரிகள் தவிர இரண்டு ஹோட்டல்களில் கேசினோவை அனுமதித்துள்ளது. சிக்கிம்மில் முதல் ஆன்லைன் லாட்டரி 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.