க்னோ

லிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிந்ததால் அரச வம்சத்தினர் அந்த நிலத்தை திரும்பக் கோரி உள்ளனர்,

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் முதலில் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி என்னும் இயங்கி வந்தது.   இதில் பல பிரபலங்கள் கல்வி பயின்றுள்ளனர்.  இவர்களில் மறைந்த ஜாட் இன அரசர் மகேந்திர பிரதாப் சிங் ஒருவர் ஆவார்.   மகேந்திர பிரதாப் சிங் (1886 -1979) சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.  இவர் தனது கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றக் கடந்த 1929 தமக்குச் சொந்தமான 3.04 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு அளித்துள்ளார்.

இந்த 90 வருட குத்தகை ஒப்பந்தம் கடந்த வருடம் முடிந்து விட்டது.  எனவே மறைந்த அரசர் மகேந்திர பிரதாப் சிங்கின் பேரன் சரத் பிரதாப் சிங் தலைமையில் அரச வம்சத்தினர் தங்கள் நிலத்தைத் திரும்ப அளிக்கக் கோரி பல்கலைக்கழகத்துக்கு சட்டப்பூர்வமான நோட்டிஸ் அளித்துள்ளனர்.   அவர்கள் இந்த நிலத்துக்குப் பதிலாக வேறு இரு நிலங்களை வழங்கத் தயாராக உளதாகவும் அதற்குப் பதிலாக அரசரின் பெயரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மற்றொரு பகுதி நிலமான 1.2 ஹெக்டேர் நிலத்தைத் திரும்பக் கோரும் அரச வம்சத்தினர் அதற்கான தற்போதைய விலையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கினாலும் பெற்றுக் கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்.   கடந்த வருடம் உ பி மாநில அரசு இந்த ஜாட் சுதந்திர வீரர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கட்ட உள்ளதாக அறிவித்திருந்தது.  குறிப்பாக மகேந்திர பிரதாப் சிங் இந்த பல்கலைக்கழகத்தின் பெயரில் சேர்க்கப்படாததற்கு முதல்வர் யோகி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மறைந்த அரசர் மகேந்திர சிங் பிரதாப் முதல் உலகப்போர் நேரத்தில் ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருந்தபடியே ஒரு தனி அரசை அமைத்திருந்தார்.  அவருக்கு 1932 ஆம் வருடம் நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டது.  அவர் நாட்டின் இரண்டாம் மக்களவை தேர்தலில் (1957-62) சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.   அப்போது அவரிடம் தோற்றுப் போனவர் பாரதிய ஜனசங்கத்தை சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.