சென்னை:
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால்,  கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில், இதுவரை கொரோனவால் 1082 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது வரை  841 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகள் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிகரித்து வரும் கொரோனா நோயாளி காரணமாக, அரசு பள்ளிகள், தனியர் பள்ளிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற சென்னை மாநகரட்சி உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.