சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக திறந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி,  சிஎம்டிஏ நிர்வாகம் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே இன்று  பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறது.

திமுக அரசு அவசர கதியில் திறந்த சென்னை கிளாம்பாக்பம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் முறையான அடிப்படை வசதி இல்லை என்றும், சென்னை நகரத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  அங்கு செல்ல போதுமான நகரப்பேருந்து வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. அதுபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டும் அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர். ஆனால், அதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளது.

தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை  நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கின் பிப்ரவரி 2ந்தேதி விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும்,  கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட பெரிய அளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை. பயணிகளின் வசதியையொட்டி நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைநடத்த போக்குவரத்து துறை தயாராக உள்ளது என்றார்

. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, இன்று  சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்,  சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்  , “ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதி வேண்டும்  என்றும்,  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம், ஆனால்,   கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாற காலக்கெடு வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,  பயணிகளை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.