திருச்சி:
தவ்ஹித்ஜமாஅத் அமைப்பு, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் பெண்கள் பேரணியையும் மாநாட்டையும் நடத்தியது. அதில் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் குறித்து அதிர்ச்சிகரமான வாசகங்களுடன் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் தலாக் முறையை ஆதரித்து முதல் மூன்று தீர்மானங்கள். 5,6.7 ஆகிய தீர்மானங்கள், பெது சிவில் சட்டத்தை எதிர்த்து நிறைவேற்றப்பட்டுள்ளன. எட்டாவது தீர்மானம், சமீபத்தில் போபால் மத்திய சிறைக் கைதிகள் எண்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்கிறது.
இவற்றில் நான்காவது தீர்மானத்தில்தான் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் குறித்து அதிர்ச்சிகரமான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
விபச்சாரத்தை குற்றமாக அறிவிக்க கோரும் இத் தீர்மானத்தில், “திருமணம் செய்யாமல் பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு ஏமாற்றப்பட்ட குஷ்பு கவுதமி போன்றவர்களின் நிலைமை மற்ற எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்” என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் முகநூல் பக்கத்திலும் இவ்வாசகம் கொண்ட பதிவு இருக்கிறது.