குஷ்பு, கவுதமி ஆகியோர் பற்றி பெண்கள் மாநாட்டில் அதிர்ச்சிகரமான திர்மானம்!

Must read

கவுதமி, குஷ்பு
கவுதமி, குஷ்பு

திருச்சி:
வ்ஹித்ஜமாஅத் அமைப்பு, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து திருச்சியில் பெண்கள்  பேரணியையும் மாநாட்டையும் நடத்தியது. அதில் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் குறித்து அதிர்ச்சிகரமான வாசகங்களுடன் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடை
மாநாட்டு மேடை

மொத்தம் எட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் தலாக் முறையை ஆதரித்து முதல் மூன்று தீர்மானங்கள். 5,6.7 ஆகிய தீர்மானங்கள், பெது சிவில் சட்டத்தை எதிர்த்து நிறைவேற்றப்பட்டுள்ளன.  எட்டாவது தீர்மானம், சமீபத்தில் போபால் மத்திய சிறைக் கைதிகள் எண்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்கிறது.
 
அந்தத் தீர்மானம்
அந்தத் தீர்மானம்

இவற்றில் நான்காவது தீர்மானத்தில்தான் நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் குறித்து அதிர்ச்சிகரமான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
விபச்சாரத்தை குற்றமாக அறிவிக்க கோரும் இத் தீர்மானத்தில், “திருமணம் செய்யாமல் பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு ஏமாற்றப்பட்ட குஷ்பு கவுதமி போன்றவர்களின் நிலைமை மற்ற எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்” என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முகநூல் பக்கத்தில் தீர்மானம்
முகநூல் பக்கத்தில் தீர்மானம்

தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் முகநூல் பக்கத்திலும் இவ்வாசகம் கொண்ட பதிவு இருக்கிறது.
 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article