ல்பர்கி

காங்கிரஸ் 5 மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நவம்பர் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்,

”ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸின் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் மூலம் நாட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலையே உள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் அதிகமாகி உள்ளது. அங்கு மக்கள் அனைவரும் பாஜக முதல்- அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். மேலும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அரசுகள் தங்களது பணிகளை சரியாக செய்து வருகின்றன, இந்த மாநிலங்களில் எந்த வித பிரச்சினையும் இல்லை, 

மேலும் ஆளும் பாஜக அரசு அளித்த வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற எந்த வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.