டில்லி

னது தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளைக் கையில் எடுப்பதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். 

 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே \ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர்,

“உங்களுக்கு இடையே உள்ளக் கருத்து வேறுபாடுகளை அகற்றிவிட்டு, கட்சியின் வெற்றியை உறுதி செய்ய குழுவாக செயல்படுங்கள். கட்சியின் உள் விவகாரங்களை ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுப் பூர்வமான பிரச்சினைகளை கையில் எடுக்கிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சியை வேண்டுமென்றே தொடர்புப்படுத்துகிறார்கள்.

பாஜகவின் இத்தகைய பொய், வஞ்சகம் மற்றும் தவறான செயல்களுக்கு மக்கள் முன்னிலையில் நாம் ஒன்றுபட்டுத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.”

என்று தெரிவித்துள்ளார்.