மும்பை: ராகுல் காந்தியின் பாரத் நியாய்  யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க திருமாவளவனுக்கு  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கடிதம்  எழுதி உள்ளார்.

ஏற்கனவே குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, தற்போது மீண்டும் பாரத் நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மத்திய பாஜகவுக்கு எதிரான பிரசாரத்துடன், காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரை செயல்பட்டு வருகிறது. மணிப்பூர் முதல் மும்பை வரையிலான 6,700 கிலோமீட்டர் தூரம் கொண்ட யாத்திரை, தஹோத், பஞ்சமஹால், சோட்டா உடேபூர், பருச், தபி, சூரத் மற்றும் நவ்சாரி ஆகிய ஏழு குஜராத் மாவட்டங்கள் வழியாகச் சென்று மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறரது.

இந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தி தற்போலு பல மாநிலங்கள் வழியாக வந்துகொண்டிருக்கிறார்.  தற்போது குஜராத்தில் 10ந்தேதி முதல் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் வரும்  17ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யாத்திரை நிறைவு விழா நடைபெற உள்ளது.

ராகுலின் பாரத் நியாய்  யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆங்காங்கே மாநிலங்களில் நடைபெற்ற யாத்திரையுல், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.  ராகுலின் யாத்திரை வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது. இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது. இதை பிரமாண்டமாக நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  மேலும் இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.  இதில், .அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாரத் நியாய்  யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பி வருகிறார். அதன்படி,  தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.