லபர்கி

காங்கிரசுக்குக் கர்நாடகம் மாநிலம் ஏ டி எம் போல உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியதற்கு கார்கே பதில் அளித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்து வருகிறது. இங்கு முதல்வராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார்.  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜு கார்கே கலபர்கியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

செய்தியாளர்கள் அவரிடம், கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் அரசுக்கு ஏ.டி.எம். போன்றது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து கேள்விகள் எழுப்பினர்.

கார்கே இதற்கு

”கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இதற்கு முன்பே பதிலளித்து விட்டனர். இங்கு அரசு அமைந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ளன.. அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் என்பதை அவர்கள் சிந்தித்து, பின்னர் பேச வேண்டும்.

தேர்தலை முன்னிட்டு பாஜகவினர் அரசுக்கு அவதூறு ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் அது வேலைக்கு ஆகாது.  இந்தியா கூட்டணியில் தொகுதி பகிர்வை நாங்கள் கவனத்தில் கொள்வோம்.  அதற்கு முன்பு 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடியட்டும்”

என்று பதில் அளித்துள்ளார்.