ண்டிகர்

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பஞ்சாப் முதல்வர் ப்கவந்த் மானுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

காலிஸ்தான் தீவிரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு இந்தியாவுக்கு மிரட்டல் விடுப்பது வழக்கமாகி வருகிறது.  இந்த தீவிரவாதிகள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும். கனடா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதியும், தடை செய்யப்பட்ட எஸ்.எப்.ஜே. அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், பஞ்சாப் முதல்வருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதாவது குடியரசு தின விழா தாக்குதலுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் தயாராக வேண்டும் என்றும், அன்றைய தினம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.யை கொல்லப்போவதாகவும், குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களை கொல்லப்போவதாக குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.