ண்டன்

பிரிட்டனில் உள்ள மொத்த கே எஃப் சி கிளைகளில் சுமார் 75/5 வரை,  கோழிகள் தட்டுப்பாட்டால் திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற கே எஃப் சி என்னும் கோழி உணவகங்கள் பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்று காணப்படுகிறது.    இந்த உணவகங்களுக்கு கடந்த 2011ஆம் வருடம் முதல் பிட்வெஸ்ட் ,   டி எச் எல், மற்றும் குவிக் சர்விஸ் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய மூன்று போக்குவரத்து  நிறுவனங்கள் மூலம் நாடெங்கும் உள்ள கே எஃப் சி உணவகங்களுக்கு கோழிகள் டெலிவரி செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனங்களில்  தற்போது நேரத்துக்கு கோழிகளை ஒவ்வொரு உணவகத்துக்கும் டெலிவரி செய்யாமல் உள்ளது.   டி எச் எல் நிறுவனம் இது குறித்து தங்களின் நிர்வாகம் தற்போது பல புதிய விதிகளை வகுக்க உள்ளதால்  போக்குவரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கே எஃப் சி உணவகங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதில் சிறிது தடை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளது.

இதே போல குவிக் சர்விஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமும் அதன் நிர்வாக காரணங்களால் முழு அளவில் இயங்கவில்லை என அறிவித்துள்ளது.   மேலும் சில நாட்களுக்கு கே எஃப் சி கான டெலிவரியில் சிறிது தாமதம் ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.   இந்த இரு போக்குவரத்து நிறுவனங்களும் கே எஃப் சி உணவகங்களின் முக்கிய போக்குவரத்து நிறுவனங்கள் ஆகும்

இதனால் பல இடங்களில் உணவகங்களை கே எஃப் சி நிர்வாகம் மூடி உள்ளது.   திறக்கப்பட்டுள்ள ஒரு சில இடங்களிலும் மிகவும் குறைந்த அளவில் அதுவும் குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டுமே விற்கப்படுகிறது.    அத்துடன் இந்த உணவகஙக்ளின் ஊழியர்களை சிறிது காலத்துக்கு விடுமுறையில் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் ஒப்பந்தம் மூலம் நடத்தப்படும் உணவகங்கள் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் நிர்வாகம் வெளியிடவில்லை.    அந்த உணவகங்கள் குறித்து அந்தந்த ஒப்பந்த தாரர்கள் முடிவு செய்வார்கள் என அறிவித்துள்ளது.    இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என சரியாக சொல்ல முடியாது என கே எஃப் சி நிர்வாக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.