ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

Must read

ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

சல்லிகட்டு நடத்துவதற்கு தமிழர்களின் கலாசார அடையாளத்தை பாதுக்காக்கும் வகையில் நிரந்தரதீர்வாக அவசர சட்டத்தினை மாற்றீடு செய்ய முறையான சட்டமுன்வடிவு உடனடியக கொண்டுவரப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் புதிய அரசு செயல்படும்.

மத்திய வரி பகிர்விலிருந்து தமிழகத்திற்கு 2ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்

வர்தா புயல் பாதிப்பால் ஏராளமான மரங்கள் சரிந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் மரம் நடும் பெருந்ததிட்டம் தொடங்கப்படும்.

வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565கோடிரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொள்ளும்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும்.

2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும்.

More articles

Latest article