பஞ்சாப்: பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் குண்டு வெடித்தது. 3வது மாடியில் உள்ள கழிவறை ஒன்றில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் முதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது .ஆனால் பின்னர் போலீசார் இறந்தவர் எண்ணிக்கை ஒன்றுதான் என்று அறிவித்தனர். குண்டுவெடிப்பில் இறந்தவர், குண்டுவெடிப்பை நிகழ்த்தியவராக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் குழப்பத்தை விடுவிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.
இந்த நடந்த குண்டு வெடிப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழு லூதியானா சென்று ஆய்வு மற்றும் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் எஸ் எஃப் ஜெ (Sikhs for Justice (SFJ) அமைப்பை சேர்ந்த ஐஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பில் இறந்தது வெடிகுண்டை கொண்டுசென்ற முன்னாள் போலீஸ்காரர் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாபில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
[youtube-feed feed=1]