டக்கரா

சொத்துக்காகத் தனது கணவர் குடும்பத்தினரைக் கேரளாவில் பெண் ஒருவர் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் 14 வருடங்களுக்குப் பிறகு வெளி வந்துள்ளது.

கேரள  மாநிலம் தாமரசேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியையான அன்னமா – டாம் தாமஸ் தம்பதிக்கு. ராய் தாமஸ், ரோஜோ தாமஸ் என இரு பிள்ளைகள் உள்ளனர்… அன்னமா குடும்பத்தின் மூத்த மருமகள் ராய் தாமஸின் மனைவி தான் ஜோலி ஆவார்.    இத்துடன் டாம் தாமஸின் சகோதரர் மகன் சாஜூ. சாஜூவின் மனைவி சிலி. அன்னமாவின் சகோதரர் மேத்தீவ். உள்ள இவ்வீட்டில் அதிகாரமிக்க நபராக அன்னமா இருந்து குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் அ கவனித்து வந்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 22- ம் தேதி அன்னமா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதன் பிறகு  டாம் தாமஸ் ஆகஸ்ட் 26-ம் தேதியும், 2008-ம் ஆண்டு. ரோஜோவின் சகோதரர் ராய் 2011-ம் ஆண்டு, இறந்துள்ளனர். அடுத்தடுத்த மரணங்கள் அன்னமாவின் சகோதரர் மேத்தீவ் குடும்பத்தினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதனை மேத்தீவிடம் முறையிட்டுள்ளனர். இந்த பிரச்சினையின் காரணமாக மேத்தீவ் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.  கடந்த 2014 ஆம் அண்டு பிப்ரவரி 24 மேத்தீவ் மரணமடைந்தார்

அதையடுத்த மூன்று மாதத்தில் சாஜூவின் 2 வயது பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்கள் கழித்து   மே 3, 2014-ம் ஆண்டு குழந்தை இறந்தது.  அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து சாஜூவின் மனைவி சிலி பல் மருத்துவமனைக்குச் சென்ற போது வாந்தி எடுத்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்  அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் இந்தக்குடும்பத்தில் மரணங்கள் நிகழவில்லை. விதவையான ஜோலியை, மனைவி இறந்த ஒரு வருடத்தில் சாஜூ திருமணம் செய்துக்கொள்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு  இதனால் சந்தேகமடைந்த ரோஜோ இந்த சம்பவம் தொடர்பாக \ கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்தவர்களின் உடலைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்தது.   அதையொட்டி புதைக்கப்பட்ட அனைவரது உடல்களும் தோண்டி வெளியில் எடுக்கப்பட்டு  நடந்த பரிசோதனையில் இறந்த 6 பேரின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையின் போது ஜோலி அளித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தாம் ஒரு பொறியியல் பட்டதாரி என்.ஐ.டியில் விரிவுரையாளராக பணியாற்றுவதாகக் கூறிய ஜோலி வணிகவியல் படித்துள்ளார்.    அவரது போன் கால்களை ஆய்வு செய்த போது பல மணிநேரம் சாஜூ மற்றும் ஜோலி பேசியது தெரியவந்துள்ளது.  அத்துடன் அனைத்து மரணங்களின் போது ஜோலி தான் இருந்துள்ளார் என்பதும். அவர் தான் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்பதும் காவல்துறையினருக்கு அவர் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது ஜோலி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள், “தற்போது முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.   ஜோலி நல்ல வேளையாகக் கைது செய்யப்பட்டுவிட்டார். அவர் இன்னும்  எத்தனை கொலைகளைச் செய்யத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தான் தெரியவரும். தனது  கணவர் உட்பட 5 பேருக்கு விஷம் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தனர். தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் ஜோலி மற்றும் இருவர் ஆஜர்ப்படுத்தப் பட்டுள்ளனர்.  குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 2 வாரங்கள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.