திருவனந்தபுரம் 20/01/2017

கேரளா திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள டெக்னோபார்க்கில்(Technopark) அமைதியான முறையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்கள் கூடி தங்களது ஆதரவை வெள்ளியன்று தெரிவித்தார்கள். தமிழர்களுக்கு ஆதரவாக கேரளத்தை சேர்ந்த சில ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஜல்லிகட்டிற்கு ஆதரவான பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி நின்றிருந்தனர். தமிழர் பாரம்பரியத்தை என்றும் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், காளைகளை காத்தால் தான் நாட்டு மாடுகளை பாதுகாக்க முடியும் என்பது போன்ற பதாகைகளை தங்களது கையில் ஏந்தியிருந்தனர். ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி பெற்றதால் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் இந்த ஆதரவு கூட்டம் அமைதியான முறையில் நடந்தது, பங்கேற்றவர்கள் கடைசியில் சிறிது நேரம் காவல் துறையினர் அனுமதித்ததால் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிவிட்டு பின்னர் தங்களது பணிக்கு திரும்பினர்.

இது போன்ற ஆதரவு கூட்டத்தை வாட்சாப் குழுவின் மூலமாக ஒருங்கினைத்தாதாகவும் இதன் அமைப்பாளர்கள் கூறினர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் படங்களை கீழே கேலரியில் காணலாம்.