திருவனந்தபுரம்

மூக வலை தளங்கள் மூலம் இணையத்தில் நடக்கும் தனிமனித தாக்குதலைத் தடுக்க கேரள  அரசு காவல்துறை சட்ட விதியை திருத்த உள்ளது.

சமூக வலை தளங்கள் மூலம் பலர் தனிமனித தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  இதைத் தடுக்க இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதியை அரசு அறிமுகம் செய்தது.   இதன் மூலம் தவறான எதையும் இணையத்தில் பதிவோரை காவல்துறை கைது செய்து வந்தது.   கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என சட்டவிதியைத் தடை செய்தது.

அத்துடன் அப்போது கேரள காவல்துறை சட்ட விதி 118(டி) பிரிவையும் எளிதாக்கியது. தற்போது சமூக வலைத் தளம் மூலம்  தனிமனித தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் ஆதாரமற்ற செய்திகள் பரப்பப் படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.  இதையொட்டி கேரள அமைச்சரவை நேற்று கூடி கேரள போலிஸ் சட்ட விதிகளில் 118(ஏ) என்னும் புதிய பிரிவைச் சேர்க்க உத்தரவிட ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது.

இந்த புதிய பிரிவு மூலம் எந்த ஒரு மனிதரும் மற்றவர் மீது தவறான, அல்லது அவருக்கு எதிரான அல்லது அவர் மீது தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கக் கூடியவற்றை எந்த ஒரு தகவல் ஊடகத்திலும் பதிவோருக்கு ஐந்து வருடச் சிறைத் தண்டனை, அல்லது ரூ.10000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.