திருவனந்தபுரம்:
கேரளாவில் கல்வி வளர்ச்சிக்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ்ஐசக்  கூறியுள்ளார்.
கேரளாவில் பனிராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சராக தாமஸ் ஐசக் உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெற்று இயங்கும் பள்ளிகளை நவீனப்படுத்த கேரள அரசு ரூபாய் பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது  என்றார்.
மேலும், கேரள அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த கடந்த 2001-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐடி@ஸ்கூல்ஸ் என்ற தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
kerala-IT
இதுகுறித்து, ஐடி@ஸ்கூல்ஸ் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் அன்வர் சதாத்  கூறியதாவது:
இத்திட்டத்தின் வாயிலாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுமார் 60,000  அதி-நவீன வகுப்பறைகள் கட்டித்தரப்படும்.
மேலும்  1,000 பள்ளிகளுக்கு அனைத்து அம்சங்களுடன்  உள் விளையாட்டு அரங்குகள்  சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்று கூறினார்.
இதற்கான பரீட்சாத்த முயற்சிகள் 4 பள்ளிகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்