ஐதராபாத்:
ந்திய முன்னனி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னாநேவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
சாய்னா நேவால் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். உக்ரைன் வீராங்கனையுடன் ஒலிம்பிக் போட்டியில் மோதியபோது, கீழே விழுந்து, கால் முட்டியில் அடிபட்டது.

சாய்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது தந்தை ஹர்வீர் சிங்  கூறியதாவது:
ஒலிம்பிக் போட்டியில் உக்ரைன்  நாட்டை சேர்ந்த மரியாவுடன் எதிர்த்து சாய்னா மோதியபோது, கீழ் விழுந்ததில்  சாய்னாவின்  வலது மூட்டு காலில் காயம் ஏற்பட்டதாகவும்.  நாடு திரும்பிய சாய்னா இரண்டு  நாட்களாக ஐதராபாத் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் காயம் குறித்து எதுவும் தனக்கு தெரியாது என்றும் , டாக்டர் MRI ஸ்கேன் எடுத்துள்ளார்கள் ஆனால் அதுபற்றி எந்தவிதமான தகவலையும் எனக்கு மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்றும், சாய்னாவுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க  நாளை மும்பை செல்வதாகவும் கூறினார்.