புதுடெல்லி:
டெல்லியில் அரசு மருத்துவமனையில், பணி நேரத்தில், வேலை செய்யாமல் கம்ப்யூட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஊழியரை கையும் களவுமாக பிடித்து பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார் டெல்லி துணைமுதல்வர்.
aaam2
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது. துணைமுதல்வராக  மனிஷ் சிசோடியா உள்ளார்.
சம்பவத்தன்று டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையை பார்வையிட சென்றார். மருத்துவ மனையில் அனைத்து டாக்டர்களும்  பணிக்கு வந்திருக்கிறார்களா என்றும், மருத்துவமனை சுத்தமாக இருக்கிறதா என்று வளாகம் முழுவதும் சுற்றி பார்த்தார்.
அரசு மருத்துவமனையில் உடல் உபாதைகளோடும், மன வலியோடும் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருக்க  அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலை நேரத்தில் வெகு சீரியஸாக தனது கம்ப்யூட்டரில் சினிமா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்  மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
அப்போது, திடீரென மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர் அறைக்கு சென்றார் துணை முதல்வர் சிசோடியா.  அங்கு வேலை செய்யும் ஊழியர், அறைக்குள் துணைமுதல்வர் வருவதை கவனிக்காமல் கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்தார்.
aamdim-1
இதை கண்ட மனிஷ் சிசோடியா, அவரை விசாரித்து, பணி நேரத்தில் வேலை செய்யாமல் படம் பார்த்துக்கொண்டிருந்த ஊழியரை உடனே பணி நீக்கம் செய்ய அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் வீடியோவாக வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவிவருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட இக்காணொளியை இதுவரை 1,2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
13,000 லைக்குகளைப் பெற்றுள்ளது, 22,323 பேர் இதை தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
பின்னூட்டங்களில் வலைதளவாசிகள் அமைச்சரை பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்கள்