திருவனந்தபுரம்

வம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 7 ஆம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்

கொரோனா  பரவல் குறைந்து வருவதால் கேரள மாநில ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.  அதன்படி நேற்ருமுதல் கல்லூரிகள் திறக்ப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்கி உள்ளன.   அடுத்த வாரத்தில் இருந்து முதல் மற்றும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கபடும் என அறிவிக்கபடுள்ளன.  வரும் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 7 வகுப்புக்கள் மற்றும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.   நவம்பர் 15 முதல் 8,9,11 ஆம், வகுப்புக்கள் தொடங்க உள்ளன.  கடந்த சில நாட்க்களாக சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் 1 முதல் 7 வகுப்புக்களில் வகுப்புக்கு 10  மாணவர்களும் 8 ஆம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.  தொடக்கப்பள்ளிகளில் ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு மாணவ்ரும் 8 வகுப்புக்கு மேல் 1 பெஞ்சில் இரு மாணவர்களும் அமர அனுமதிக்கப்பட உள்ளது.  மதியம் வரை மட்டுமே வகுபுக்கள் இயங்க உள்ளன.