திருவனந்தபுரம்: பிபிசி தொலைக்காட்சியில் பேசியபோது, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா (ஷைலஜா டீச்சர்), மாஹி என்பதற்கு பதிலாக கோவா என்று குறிப்பிட்டுவிட்டார்.
இந்தப் பிழைக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மாஹி என்பது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். எனவே, அங்கே ஒருவர் கொரோனாவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுவதற்கு பதில், கோவா என்று குறிப்பிட்டுவிட்டார் அமைச்சர்.
இது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், இதனையடுத்து, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார் அமைச்சர் ஷைலஜா. அவரின் இந்த செயல் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
ஒருவர் தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதானது, அவரின் நம்பகத்தன்மை மற்றும் மரியாதையை அதிகரிக்கிறது என்று பலர் டிவீட்டியுள்ளனர்.