எர்ணாகுளம்,

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவியா ஷிஜா பாலியல்  பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஷிஜாவை கொலை செய்த குற்றவாளி  அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதிப்பதாக எர்ணாவூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி,  தனது வீட்டிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை  செய்யப்பட்டார். இந்த விவகாரம் கேரளாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு கேரள சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டு அரசு, இந்த கொலை குறித்து விசாரணை நடத்த  ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி  ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி,   அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையின்போது, மாணவி ஷிஜாவை கிண்டல் செய்ததற்காக தன்னை,  அவர்  செருப்பால் அடித்ததாகவும் அதற்கு பழி வாங்கவே அவரை பலாத்காரம் செய்து  கொலை செய்தததாக கூறி இருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஓராண்டாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் அமீருல் இஸ்லாம் தான் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. அதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதையடுத்து இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தல், தடையங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.