பரிமலை

ந்த ஆண்டு சபரிமலை சீசனால் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் ரு.31 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து அரசின் சிறப்பு பேர்ந்துகள் சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அதிக அளவில் பக்தர்களின் வருவதைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கேரள அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்பு அதிகாரி டி.சுனில்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,

”சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை சபரிமலை மண்டல சீசனில் கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 52 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.  குறிப்பாகப் பம்பை- நிலக்கல் மற்றும் நிலக்கல்-பம்பை இடையே 1 லட்சத்து 8 ஆயிரத்து 600 முறை பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.

சபரிமலை மண்டல சீசன் வரை மொத்த வருவாய் ரூ.31 கோடியே 7 லட்சம் ஆகும்.  மேலும் மகரவிளக்கையொட்டி ஜனவரி 15 ஆம் தேதி மாநிலத்தின் அனைத்து கேரள அரசு போக்குவரத்துக் கழக டெப்போக்களில் இருந்தும் 800 பேருந்துகள் இயக்கப்படும்.”

என்று கூறப்பட்டுள்ளது.