கொல்லம்

கேரள ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதால் அவர் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்துள்ளார். 

நீண்ட நாட்களாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது.  சமீபத்தில் கேரள சட்டமன்ற கூட்டத்தொடரின்போது மாநில அரசின் கொள்கைகள் அடங்கிய உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்துவிட்டு, சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள நிலம்மல் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றிருந்தார். அங்கே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.ஐ.எப். அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

ஆத்திரமடைந்த ஆரிப் முகமது கான் தனது காரில் இருந்து வெளியே வந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர்  எஸ்.ஐ.எப். அமைப்பினரின் கருப்புக்கொடி போராட்டத்தைத் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் பரபரப்ஐ ஏற்பட்த்தி உள்ளது.