திருவனந்தபுரம்: கேரளா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.டி.தாமஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான பி.டி.தாமஸ் இன்று காலமானார். உடல்நலம் பாதிப்பு காரணமாக,  தமிழகத்தின் வேலூரில் உள்ள சிஎம்சி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ( புதன்கிழமை) காலை அவர் காலமானார்.

ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிடி. தாமஸ், நோய் தீவிரம் காரணமாக, கடந்த ஒரு மாதமாக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டியின் மூன்று செயல் தலைவர்களில் பிடி தாமசும் ஒருவர்.  இவர் தற்போதைய சட்டமன்றத்தில் திருக்காக்கரா தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.