கல்லிடைக்குறிச்சி: நெல்லையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளா கத்தோலிக்க பிஷப் மற்றும் 5 பாதிரியார்கiளை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். பாதிரியாளர்களே மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சியில், கனிமங்களை சேமித்து வைப்பதற்காக அதிகாரிகளிடம் சட்டவிரோதமாக அனுமதி பெற்று, மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில், இந்த   மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்களை தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் ஆற்று மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பாதிரியார்கள் சிலர் சேர்ந்தது, எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்று ஆற்று மணலை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பிரச்சினையான நிலையில்,  2021 ஜூலை மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சி

இதையடுத்து களத்தில் இறங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், பாதிரியாளர்கள் சட்டவிரோதமாக மணல் கடலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். சுமார் 27 ஆயிரம் கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, நவம்பர் 29, 2019 முதல் நவம்பர் 28, 2024 வரை கிராமத்தில் உள்ள பொட்டலில் ஒரு தடுப்பணையை ஒட்டியுள்ள 300 ஏக்கர் நிலத்திற்கான உரிமத்தைப் பெற்று, பட்டா நிலங்களில் ஆற்று மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆற்று மணல் முழுவதும்,  சட்டவிரோதமாக இங்கிருந்து கடத்தப்பட்டு பத்தனம்திட்டா டயோசிஸூக்கு சொந்தமான நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக  கேரளாவை சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்களை சிபிசிஐடி போலீசார்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருநெல்வேலியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதிரியார்கள் தரப்பில், உடனே ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் ஜாமின் மனுவை  நெல்லை குற்றவியல் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

பாதிரியார்கள் மணல் கடத்லுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் காவல்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளின் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.