திருவனந்தபுரம்:
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பொது நீர் பட்ஜெட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது, கேரளாவில் 44 ஆறுகள், உப்பளக் கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் மற்றும் நல்ல மழை வளம் இருந்தாலும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாகப் பயன்படுத்தவும், வீணாவதைத் தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
Patrikai.com official YouTube Channel