புதுடெல்லி: கடந்த 2012-13ம் ஆண்டிலிருந்து, விளம்பரத்திற்காக டெல்லி அரசு ரூ.659.02 கோடியை செலவிட்டுள்ளது.

இதில், 77.66% தொகையானது, ‍அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரான பிறகு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ரூ.511.78 கோடி. இத்தகவல் ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2020ம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடையிலான காலகட்டத்தில் மட்டும், விளம்பரத்திற்காக டெல்லி அரசு செலவழித்த தொகை ரூ.99.69 கோடிகள்.

கடந்த 2019-20 நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.199.99 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரையிலான காலத்தில், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில், விளம்பரத்திற்காக எதுவும் செலவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.