சென்னை:
கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்து தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த அகழ்வராய்ச்சி பணிகளின்போது, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், நாணயம், மணிகள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக்கொண்டு, பழந்தமிழரின் புகழை உலகறிய செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை ஏற்றுக்கொண்டு அருங்காட்சியம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். அதன்படி, அருங்காட்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொல்லியல் ஆய்வுவாயிலாக, தமிழர் பெருமையினை பறை சாற்றிட, சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.12.25கோடியில் உருவாகும் உலகத்தரம் மிக்க அகழ்வைப்பகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 ஏக்கர் அளவு பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப் பட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் இந்த அருங்காட்சியகத்தை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 ஏக்கர் அளவு பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப் பட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் இந்த அருங்காட்சியகத்தை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அகழ்வைப்பகம் அமைக்கும் பணியானது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையின் புராதன கட்டடங்கள் பாதுகாப்புப் பிரிவு மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம்,சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர், முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.