சென்னை:
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதில் கூட்டுறவு வங்கிகள் சேவையாற்றி வந்தன. விவசாயிகள், கிராம மக்கள் கூட்டுறவு வங்கி மூலம் நகைக் கடன், விவசாய கடன் வழங்கப்பட்டு வந்தது. அதற்கும் ஆப்பும் வைக்கும் நோக்கில், கூட்டுறவு வங்கிகளை கைப்பற்றும் நோக்கில் மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்தும் வகையில், அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும்  ஒப்புதல்  அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு,   கூட்டுறவு  வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்கு வதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என கூறியதாக தகவல் பரவின. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்  தமிழக கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்தியஅரசின் உத்தரவுக்கு  தடை விதிக்க கோரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அதைத் தொடர்ந்து, ,மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.
மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை.
“கூட்டுறவு சங்க உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்று கூறிய நீதிமன்றம்,  மத்திய அரசு , ரிசர்வ் வங்கி 4 வாரத்தில்  பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.